Spotlightசினிமாதமிழ்நாடு

இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறோம் : விஜயகாந்த்!!

மிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

சென்னையில் நேற்றிரவு மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கட்டை, அரிவாளோடு ஆம்புலன்ஸை மறித்து போராட்டம் செய்தனர்.

அதன்பின்னர் போலீஸார் கூட்டத்தை கலைத்து அவர்களை விரட்டியடித்தனர். இந்நிகழ்வு பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளது அவரது உயர்ந்த மனப்பான்மையை வெளிக்காட்டுகிறது என்று மக்கள் கூறிவருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button