Spotlightசினிமா

யோகிபாபுவின் “பன்னிகுட்டி” படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உரிமையை கைப்பற்றிய 11:11 ப்ரொடக்‌ஷன்!!

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் யோகிபாபு நடிக்க உருவாகி இருக்கிறது “பன்னிகுட்டி”. இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள வெளியீடு உரிமையை கைப்பற்றியிருக்கிறது பிரபு திலக்கின் 11:11 ப்ரொடக்‌ஷன் நிறுவனம்.

11:11 Productions நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறியதாவது….
.
எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 Productions “பன்னிக்குட்டி” படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, Lyca Productions உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

“பன்னிக்குட்டி” திரைப்படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். யோகி பாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார். மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். ச

ண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close