Spotlightசினிமா

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்துக்கு தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி!

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த படமான ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் தான் 24ஏ எம் ஸ்டுடியோஸ்.

இந்நிறுவனம் கோவையில் இயங்கி வரும் டிஆர்எஸ் பிலிம்ஸ் எனும் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனர் ஆர்.டி.ராஜா, கடந்த ஆண்டு ரூ.10 கோடி கடனாக பெற்றார். ஆனால் அவர் வட்டியையும் அசலையும் இதுவரை திருப்பி செலுத்தவில்லை.

இந்நிலையில், 24ஏ.எம். நிறுவனம் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படமான, மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தை தயாரிக்க தொடங்கியது. ஆனால் சில காரணங்களால் அப்படம் கே ஜே ஆர் பிலிம்ஸ்க்கு கைமாறியது.

எனவே ஆர்.டி.ராஜா தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக டிஆர்எஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஹீரோ படம் ஆரம்பிக்கப்பட்ட போது சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்.டி.ராஜா ஆகியோர் பதிவிட்ட டிவீட்டுகள், புகைப்படங்களை ஆகியவற்றை ஆதாரங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது டிஆர்எஸ் நிறுவனம்.

தங்களுக்கு தெரியாமல் ஹீரோ படத்தை வேறு நிறுவனத்திடம் விற்றுவிட்டு, தங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஆர்.டி.ராஜா ஏமாற்றிவிட்டதாக அதில் குற்றம்சாட்டப்பட்டது. எனவே ஹீரோ உள்பட 24ஏஎம் நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் ரிலீசுக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.கணேசன், டிஆர்எஸ் நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் ஹீரோ படத்தை வெளியிட தடைவித்தார். 24ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் மேலும் இரண்டு படங்களின் ரிலீசுக்கும் நீதிபதி தடைவிதித்தார்

Facebook Comments

Related Articles

Back to top button