
கதையின்படி கொடைக்கானலில் நாயகன் ஆண்டனி காரில் ஒரு மண்புதையலுக்குல் மாட்டிக் கொண்டார். தான் மதுபோதையில் இருந்ததால் தான் எப்படி அதில் வந்து சிக்கிக் கொண்டார் என்பது அவருக்கே புரியாத புதிராக இருக்கிறது.
ஆண்டனியின் தந்தை ஜார்ஜ் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி, தாய் ரேகா விபத்தில் கால் ஊனமற்று வீட்டில் இருக்கிறார். தன் மகனை காணாமல் இருவரும் தவியாய் தவிக்கின்றனர். மறுபக்கம் காதலனை பிரிந்து வைஷாலியும் பரிதவிக்கிறார்.
நண்பர்களுடன் சேர்ந்து தனது மகனை தேடும் படலத்தில் இறங்குகிறார் ஜார்ஜ். கடைசியில் ஆண்டனியை ஜார்ஜ் கண்டுபிடித்தாரா..?? காருக்குள் சிக்கிய ஆண்டனியின் நிலை என்ன ..?? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஆண்டனியாக வருகிறார் அறிமுக நாயகன் நிஷாந்த். பல படங்களில் நடித்த மாதிரியான ஒரு அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார் நிஷாந்த். காரில் சிக்கித் தவிக்கும் அந்த திகு திகு நிமிடங்களில் படபடப்பை கொடுத்து விடுகிறார் நிஷாந்த்.
நாயகியாக வரும் வைஷாலி அழகு சிலையாக வந்து செல்கிறார். காற்றின் மொழி பாடலில் அனைவரின் மனதையும் கட்டித் தழுவுகிறார். ஜார்ஜ், ரேகா இருவரும் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
படத்தின் மிகப்பெரிய பலம் என்று பார்த்தால் அது ஒளிப்பதிவு மட்டுமே. பாலாஜியின் மிரட்டலான கேமராவில் த்ரில்லர் கதையை மிகவும் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார்.
19 வயது இளம்பெண் ஷிவாத்மிகா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அடங்காமாமலை, மற்றும் காற்றின் மொழி பாடல்கள் ரிப்பீட் மோட். பின்னனி இசையில் மிரட்டலை கொடுத்திருக்கிறார். நொடிக்கு நொடி தனது இசையின் மூலம் மிரட்டலை கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான ஒரு த்ரில்லிங் முயற்சிதான் இந்த ஆண்டனி.
கதைக்களத்தில் ஏற்பட்ட சிறு சறுக்கலே படத்திற்கும் சறுக்கலாக அமைந்துள்ளது.
ஆண்டனி – த்ரில்லரில் மசாலா இல்லையே…..