Spotlightதமிழ்நாடு

சென்னையில் ‘குளு குளு’…. வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு நிலை!!

சென்னை: இரண்டு நாட்களாக சென்னை மிகவும் மந்தமாகவும், மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பொழியும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் அந்தமான், தெற்கு மத்திய வங்கக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மாலை சுமார் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவையொட்டிய  காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button