Spotlightசினிமா

 “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும்  நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects, JB Motion Pictures
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Facebook Comments

Related Articles

Back to top button