
இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், பல்வேறு இசை ஆல்பங்களுக்கு இசையமமைத்திருப்பதோடு, சில திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளராக மட்டும் திரைப்பட தயாரிப்பாளராகவும் வலம் வரும் வி.ஆர்.ராஜேஷ், டிஸ்கவர் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் சார்பில், யோகி பாபு மற்றும் நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரை வைத்து படம் ஒன்றை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
எஸ்.பி.ராஜ்குமார் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தை வெள்ளித்திரையில் பார்க்கலாம்.
இசையமைப்பாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், வி.ஆர்.ராஜேஷ், கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
சாலைகளில் வாழ்வோருக்கு தினமும் மூன்று வேலை இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கி வந்த வி.ஆர்.ராஜேஷ், வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடிய சுமார் 3500 மேடை மெல்லிசை கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.





