
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டாக்டர்” ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார் சிவா.
அடுத்த படத்தையும் ஹிட் கொடுத்திட வேண்டும் என்ற முனைப்பில் பரபரப்பாக சுற்றி வருகிறார் சிவகார்த்திகேயன்.
தனது அடுத்தபடமாக வெளிவர இருக்கிறது “டான்”. இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
படத்தின் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் “டான்” படத்தில் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால், விரைவில் படத்தின் வெளியீடு தேதியையும் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா நிறுவனத்தோடு இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.