Spotlightதமிழ்நாடு

இந்தியாவின் முதல் 360 டிகிரி தோல் மருத்துவ மையத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், திரு.பி.சுப்ரமணி மற்றும் டாக்டர்.ஜெயகர் தாமஸ் போன்ற மதிப்பிக்க பிரமுகர்கள் டாகர் கே.டி.கே.மதுவின் சிலையைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இது இந்தியாவின் முதல் 360 டிகிரி டெர்மட்டாலஜி மையமாகும். டாக்டர். கே.டி.கே. மதுவின் மகள், பிரபல தோல் மற்றும் அழகுக்கலை மருத்துவரான பைரவி செந்திலின் கிளினிக் இது.
டாக்டர். கே.டி.கே. மது தனது தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட ஒரு மரியாதைக்குரிய மருத்துவர் ஆவார். பின்தங்கிய சமூகங்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது முதல் எதிர்கால மருத்துவ நிபுணர்களுக்கு வழிகாட்டுவது வரை, அவரது சேவை பலரிடமும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நிகழ்வில் மருத்துவர் பைரவி பேசுகையில், “மருத்துவராக இருப்பது வெறும் சிகிச்சை அளிப்பது மட்டும் கிடையாது. கவனிப்பு தேடும் ஒவ்வொரு நபருடனும் ஆத்மார்த்தமாக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை எனது தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த சிலை அவரது பாரம்பரியம் மற்றும் அவர் எனக்குள் விதைத்த மதிப்புகளின் சின்னமாகும்” என்றார். தொடர்ந்து பேசுகையில், “இது ஒரு சாதாரண கிளினிக் மட்டுமல்லாமல் புதுமை, தனி கவனிப்பு, ஆத்மார்த்தம் ஆகியவை ஒன்றிணைந்த இடமாகும்” என்று மருத்துவர் பைரவி கிளினிக்கின் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தினார்.

டாக்டர் சி.விஜயபாஸ்கர், திரு.பி.சுப்ரமணி, டாக்டர்.ஜெயகர் தாமஸ் உட்பட மதிப்பிற்குரிய பிரமுகர்களைத் தவிர, இவ்விழாவில் கலந்து கொண்ட சர்வதேச மற்றும் தேசிய மருத்துவத் தலைவர்கள் இந்த முன்னெடுப்பிற்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button