
விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி தீபாவளி தினத்தில் வெளியான படம் தான் ‘சர்கார்’. படத்தலைப்புக்கு ஏற்றவாறு படம் வெளியான தினத்தில் இருந்து ஆளும் அதிமுக அரசு தொடர்ந்து குடைச்சல் கொடுத்தவாறு இருந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விஜய் & டீம் சர்கார் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை கேட் வெட்டி கொண்டாடியது. அதில் மிக்ஸி, கிரைண்டர் வைக்கப்பட்டிருந்தது. இது, அதிமுக அரசை மேலும் வெறுப்பேற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விஜய்யின் கல்யாண மண்டபங்கள், சென்னையிலுள்ள அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை சட்டரீதியான ஆராய்ச்சிக்கு உட்படுத்த ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க. அரசு.
முதல் சிக்கலுக்கு ஆளாகியிருப்பவை விஜய்யின் திருமண மண்டபங்கள். விஜய் வெளிப்படையாக சென்னையில் முறையே வடபழனி குமரன் காலனி, அருணாச்சலம் சாலை மற்றும் போரூர் பகுதிகளில் மூன்று திருமண மண்டபங்கள் வைத்திருக்கிறார். இவை விஜய், அவரது அம்மா ஷோபா மற்றும் அவரது மனைவி சங்கீதா பெயர்களில் உள்ளன. இவற்றுக்கு முறையான பத்திரப்பதிவுகள் உள்ளதா, மாநகராட்சியில் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா வேறென்ன வில்லங்கங்கள் உள்ளன என்று முதல் குடைச்சலைத் துவங்கியிருக்கிறார்களாம்.
அடுத்த கட்டமாக வடபழனி சாலிகிராமம் பகுதியில் உள்ள 24 மாடி குடிருப்பு ஒன்றின் முதல் 12 மாடிகள் விஜய் பெயரிலும் மீதி 12 மாடிகள் அவரது தந்தை எஸ்.ஏ.சி. பெயரிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இக்கட்டிடத்திற்கு முறையான மாநகராட்சி அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று விசாரிக்க மாநகராட்சி அதிகாரிகள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோக படங்களுக்கு விஜய் வாங்கும் சம்பளம். அதில் வாங்கும் கருப்புப் பணங்களை எப்படி முதலீடு செய்கிறார். இன்று வரை பிரிடிஷ் குடியுரிமை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் விஜய் மனைவி சங்கீதா என்னென்ன தொழில் செய்கிறார், அவற்றுக்கு ரிசர்வ வங்கி அனுமதி உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விஜயை நெருக்கி அவரது இமேஜை காலி பண்ண முடிவு செய்திருக்கிறார்களாம். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் விஜய் படங்களில் மட்டுமல்ல கனவிலும் கூட அவருக்கு அரசியல் ஆசை வரக்கூடாது என்று அடிமட்ட வரை சென்று வேலை பார்க்க இறங்கியுள்ளார்களாம் அதிமுக அரசின் சில அமைச்சர்கள் பட்டாளம்.





