
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்துதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர் ஜெயக்குமார், நிதித்துறைச் செயலர் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து தற்போது “7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி டிசம்பர் 4 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் அறிவித்தார். மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை வைத்து, டிசம்பர் 5ஆம் தேதி வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.





