Spotlightசினிமா

உடலில் தீயை பற்ற வைத்து ‘ரேம்ப் வாக்’ செய்த அக்‌ஷய்குமார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு தனது அட்டகாசமான நடிப்பால் தமிழ் சினிமா துறையிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்‌ஷய் குமார், தனது உடலில் தீ வைத்துக்கொண்டு நடந்து வந்தது அதிர்ச்சியை அற்படுத்தியுள்ளார். அமேசான் ப்ரைம்காக “தி எண்டு” என்கிற வெப் சீரிஸில் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார்.

அதற்கான அறிமுக விழாவில் தான் அக்‌ஷய் குமார் இப்படி உடலில் தீ வைத்துக்கொண்டு நடந்து வந்துள்ளார். இந்த புகைப்படங்களை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அக்‌ஷய்குமார் விளம்பர நிகழ்வுக்காக தனது உடையில் தீ வைத்துக் கொண்டதைப் பார்த்த அவரது மனைவி டுவிங்கள் கண்ணா, வீட்டுக்கு வாங்க உங்களை கொலை செய்றேன் என்று தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அக்‌ஷய்குமார் தனது உடையில் நெருப்பை பற்ற வைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களின் வாயிலாக அறிந்த அக்‌ஷய்குமாரின் மனைவி டுவிங்கிள் கண்ணா, ‘நீங்கள் திடீரென தீ வைத்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீட்டுக்கு வாங்க, உங்களை கொலை செய்கிறேன் என்று செல்லமாக மிரட்டியுள்ளார். அவரது ட்வீட் தற்போது வைரலாகியுள்ளது.

 

Facebook Comments

Related Articles

Back to top button