Spotlightசினிமா

“சீயான் 63” புரோமோ வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !

சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு  புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது.

 இயக்குநர்  ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 ல்  சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்கிய  “இருமுகன்”  படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த கூட்டணி  10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்க, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் R. D. ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றுகிறார்.  வசனங்களை ஷான் கருப்புசாமி எழுதுகிறார்.  தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, ஆடை வடிவமைப்பாளராக  பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

நடிகர் :

 சீயான் விக்ரம்

தொழில்நுட்பக் குழு

எழுத்து & இயக்கம் : ஆனந்த் சங்கர்
தயாரிப்பு நிறுவனம் : சத்ய ஜோதி பிலிம்ஸ்

வழங்குபவர் : TG.தியாகராஜன்
தயாரிப்பாளர்கள் : செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்
இணை தயாரிப்பு : G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : R.D. ராஜசேகர்  ISC
தயாரிப்பு வடிவமைப்பு : ராஜீவன்
வசனம் : ஷான் கருப்புசாமி
படத்தொகுப்பு : ரேமண்ட் டெரிக் கிராஸ்டா
கலை இயக்கம் : சூர்யா ராஜீவன்
ஆடை வடிவமைப்பு : பூர்ணிமா ராமசாமி
Facebook Comments

Related Articles

Back to top button