
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நடிகர்கள் அரசியலுக்கு வருவது அதிகரித்துவிட்டது. நடிகர்கள், வியாபார நோக்கத்துடன் தான் அரசியலுக்கு வருகிறார்கள்.
வரும் நாடாளுமன்றத்துக்குப் பிறகு, கட்சி தொடங்கி, அரசியலுக்கு வந்த நடிகர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்கள்.
ரஜினிகாந்த் அரசியலை விட்டு ஒதுங்கியிருப்பது அவருடைய சாணக்கியத்தனத்தைக் காட்டுகிறது.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Facebook Comments





