Spotlightசினிமா

சீனாவில் திரையிடப்படும் ‘பரியேறும் பெருமாள்’!

சீனாவில் நடந்து வரும் ஹைனன் தீவு சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட உள்ளது “பரியேறும் பெருமாள்”.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில், வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் கருப்பி என்ற பெயரில் நாய் ஒன்று நடித்திருந்தது. ஒரு சில காட்சிகளில் மட்டுமே இந்த நாய் வந்தாலும், அனைவருடைய மனதையும் கவர்ந்து விட்டது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று, நல்ல கதை கொண்ட சிறிய பட்ஜெட் படம் என பாராட்டப்பட்டது.

இதில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது சீனாவில் நடந்து வரும் ஹைனன் தீவு சர்வதேச திரைப்பட திருவிழாவாவில் ஐந்து நகரங்களில் பரியேறும் பெருமாள் படத்தை திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button