
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ச ஜோசப் விஜய் சார்பில், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வாழ்த்துச் செய்தியில், “தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும், தாங்கள் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Facebook Comments





