
பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க, விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா சிறுவர்களை வைத்து வெளிவந்த இரு படங்களும் மிகப்பெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக கொண்டாடப்பட்டது.
காரணம், இப்படங்களில் சிறுவர்களின் வாழ்வியலையும், அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டிருந்தது தான்.
இந்த வரிசையில், அறிமுக இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘பிழை’.
இப்படத்தில் மைம் கோபி, சார்லி, ஜார்ஜ், மற்றும் ’காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நஸாத் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தனது பிள்ளைகள் வாழ்க்கையில் மிகப்பெரும் உச்சத்தை எட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும், ஆனால், பிள்ளைகளோ அவ்வப்போது பெற்றோர்களையே எதிரியாக பார்க்கின்றனர். அதனால், பின்னாளில் அவர்கள் படும் கஷ்டங்கள் என்னென்ன என்பது பற்றிய கதையை மிகவும் உயிரோட்டமாக வைத்து கொண்டு வரவைக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘பிழை’.
இப்படத்தினை இம்மாதம் (செப்டம்பர்) 20 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஆர். தாமோதரன் இப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




