
ப்ரேமம் படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த நாயகி தான் சாய் பல்லவி. இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் அசத்தி கொண்டு வருகின்றார்.
இப்படியிருக்கும் தருணத்தில் நடிகை சாய் பல்லவி தமிழில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்கும் போது விஜய்யுடன் காதலில் விழுந்ததாகவும், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி காட்டு தீ போல் பரவியது.
இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் விஜய்யை தொடர்பு கொண்டு பேசுகையில் அவர் பதறி போய், சார் அப்படி எல்லாம் ஒன்று கிடையாது , அது மொத்தமும் வந்ததி தான், நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
Facebook Comments