
கமல் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2′ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவாணி சங்கர், விவேக், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் சமுத்திரகனி, நெடுமுடி வேனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் அரசியல் பணி உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி வரும் கமல் நேற்று நடிகர் திலகம் சிவாஜியின் அன்னை இல்லத்திற்கு சென்று அவரின் உறவினர்களை சந்தித்துள்ளார். அங்கு அவருக்கு அறுசுவை விருந்து வைக்கப்பட்டுள்ளது.
விருந்தை முடித்த கமல், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. pic.twitter.com/cKo8B6HXah
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2019





