
ஷாம் நடிப்பில் நேற்று வெளிவந்துள்ள படம் தான் ‘காவியன்’.
தமிழகத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் ஷாம், பயிற்சிக்காக அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்காவில் அவசர கால அழைப்பு (Emergency call) போலீஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார் ஸ்ரீதேவி குமார். அங்கு பயிற்சிக்கு வரும் ஷாமை கண்டு அதிர்ச்சியாகிறார் ஸ்ரீதேவி.
இருவருக்கும் என்ன தொடர்பு என்பதற்கு ஒரு ப்ளாஷ் பேக் செல்கிறது. இந்நிலையில், எமர்ஜென்சி செக்ஷனில் இருக்கும் ஸ்ரீதேவிக்கு ஒரு போன் வருகிறது. அதில் பேசும் ஒரு பெண், தன்னை யாரோ ஒருவன் காரில் கடத்திச் செல்கிறான் என்று, இந்த வழக்கை அமெரிக்க காவல்துறையோடு ஷாம் இணைந்து அந்த பெண்ணை கண்டுபிடித்தார்களா..??? கடத்தியவன் யார்.?? எதற்காக கடத்தினான்..?? என்பதற்கான பதிலை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர் சாரதி.
ஷாம் வழக்கம் போல் அழகாக வந்து செல்கிறார். ஆக்ஷனின் மிரட்டுகிறார். எப்போதும் எதையோ இழந்ததை போல் சுற்றிக் கொண்டு இருப்பது ரசிகர்களை வெறுப்படைய வைக்கிறது.
நாயகியாக வரும் ஸ்ரீதேவி குமார் அழகில் கொள்ளை கொள்கிறார். இன்னும் சிறிது பயிற்சி எடுத்தால் கோலிவுட்டில் நல்லதொரு நடிகையாக வலம் வருவார்.
கடத்தப்பட்ட பெண்ணாக வரும் ஆத்மி, சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஷாமின் நண்பராக வரும் ஸ்ரீநாத் காமெடி என்ற பெயரில் தலைவலியை கொடுத்துச் செல்கிறார்.
ஆங்காங்கே. இந்திய போலீஸை அவமதிக்கும் அமெரிக்க போலீஸுன் டயலாக்கிற்கு சரியான பதிலடியை கொடுக்காமல் செல்கிறார் ஷாம்.
ஆத்மியை கடத்திச் செல்லும் காரணம் வலுவாக இல்லாதது, படத்திற்கு பெரிய சரிவு.
எம் எஸ் ராஜேஷ் குமாரின் ஒளிப்பதிவு சூப்பர். ஷ்யாம் மோகனின் பின்னனி இசை ஓகே ரகம் தான்.
காவியன் – பார்வை தெரியா ஓவியன்..



