Spotlightசினிமா

என் தாயையும் தவறாக பேசுகிறார்கள்.. கலங்கிய லாரன்ஸ்!

 

சில தினங்களுக்கு முன் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் லாரன்ஸ் பங்குகொண்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக சீண்டினார்.

இந்நிலையில், சீமானின் தொண்டர்கள் லாரன்ஸை தரக்குறைவாகவும் கீழ்த்தரமாகவும் விமர்சனம் செய்யத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘
நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்! இதுவரை என்னைத்தான் தவறாக பேசிக்கொண்டிருந்தார்கள், இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிக தவறாக பேசுகிறார்கள்! மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக்கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்!
நான் ஒரு தனி மனிதன்!
எனக்கென்று தனிக் கூட்டமில்லை!
நான் படிக்காதவன்!
ஒரு தனி மனிதனாய் நின்று…..
“அன்புதான் தமிழ்”
என்கிற,
அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன்! இந்த அமைப்பின் மூலம்,
தமிழரின் மாண்பையும்,
தமிழரின் பண்பையும்,
தமிழரின் அன்பையும்,
உலகறிய செய்வதே அதன் நோக்கம்!
“இன்னார் செய்தாரை ஒருத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்!”
என்பது திருக்குறள் அதை பின்பற்றியே…
“எதிரிக்கும் உதவி செய்!
பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை!
நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு!
உள்ளத்தால் ஒன்றே!
கடவுளை வெளியே தேடாதே!
உனக்குள் இருக்கிறார்!
எனக்கு இது போதும் என்று நினை!
ஆசையை விடு!
அள்ளிக்கொடு!
ஆண்டவன் உன் பக்கம்!”
அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால்….
தர்மம் இருப்பது உண்மையானால்…
என்வழி உண்மையானால்…
நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு
இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும்!

இறுதியாக ஒன்று….
“என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும்,
அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும்,
நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்…!

அன்புடன்…
ராகவா லாரன்ஸ். ’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button