
தனுஷ் நடிக்க வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘அசுரன்’. இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
மஞ்சு வாரியர், டிஜே, கென் கருணாஸ், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஜி வி பிரகாஷின் பாடலும் பின்னனி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது.
பிரம்மாண்ட இயக்குனர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் வெளியான நாளிலிருந்து பல நாட்கள் பல திரையரங்குகள் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தது.
தயாரிப்பாளர் ஆரம்பித்து விநியோகஸ்தரர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் இப்படம் பெரும் லாபத்தை ஈட்டித் தந்த படமாக அமைந்தது.
இன்று இப்படம் 100வது நாளை கொண்டாடுகிறது. பல திரையரங்குகளில் இதற்கான கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.




