
காவல் நிலையத்தில் உயிரிழந்தால் மட்டுமே அதற்கு ‘லாக் அப் டெத்’ என்று பெயர். இது லாக் அப் டெத் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை – மகன் இருவரும் காவல் நிலையத்தில் அடிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தால், பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போதும், ‘சாத்தன்குளத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு 2 நாட்கள் கழித்தே உயிரிழந்தனர். லாக்-அப்பில் இருக்கும் போது காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் மட்டும் அது லாக்-அப் மரணம் என்றுள்ளார். மேலும் நீதிமன்றத்தின் அறுவுறுத்தலின் படி இருவரின் உடற் கூறாய்வு நடைபெற்றதாக தெரிவித்தார்.
மேலும் சாத்தான்குளம் சம்பவம் லாக்ப் மரணம் என்று கனிமொழி கூறியுள்ளார். திமுக ஆட்சி காலத்திலும் லாக்ப் மரணம் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் 1996ல் திமுக ஆட்சி காலத்தில் 2 பேர் உயிரிழந்த லாக் அப் மரணம் நடைபெற்று உள்ளது. இதை அரசியலுக்காக அவர் சொல்லுவதாக தான் எண்ண வேண்டும். சாத்தான்குளம் விவகாரத்தினை தேர்தல் வாக்கு வங்கிற்காக எதிர்கட்சிகள் செய்ய நினைத்தால் மக்களுக்கு உண்மை தெரியும்
முதலில் காவ்துறையினர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டாலும், மக்களின் உணர்வுகளை மதித்து பணியிடை நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டார் நீதிமன்ற என்ன வழிமுறை சொல்கிறதே, என்ன தீர்ப்பு சொல்கிறதோ உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு தயராக உள்ளது.’ என்றார்.
அமைச்சரின் இந்த பேச்சு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





