Spotlightஇந்தியாதமிழ்நாடு

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான் – ரஜினிகாந்த்!

போயல் கார்டரின் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் ரஜினி பேசியதாவது

மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்திவிட்டு தான் கட்சி துவங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று காத்திருந்தேன். அதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தேன். ஆனால், கொரோனா தொற்று காரணமாக என்னால் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017-ம் ஆண்டே அறிவித்திருந்தேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எனக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருந்தது. கொரோனாவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக என்னால் மக்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை. தமிழக மக்களின் பிரார்த்தனையால் தான் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பி உயிரோடு வந்தேன்.

அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை. அரசியல் மாற்றம் வந்தே தீர வேண்டும். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. கொடுத்த வாக்கிலிருந்து நான் என்றும் தவற மாட்டேன் என்றார்.

வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி தோல்வியடைந்தாலும் அது மக்களின் தோல்வியே என்று கூறியிருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button