
சேலம்: தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையை தமது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி தொடங்கியுள்ளார்.
நங்கவள்ளி அருகே பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
சென்றாயப் பெருமாள் கோயிலில், முதல்வர் பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. கோயிலில் வழிபட்ட பின்னர் அங்கிருந்து முக்கியச் சாலையில் நடந்து சென்று முதல்வர் பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கினார்.
முதல்வர் தனது தேர்தல் பரப்புரையை துவங்கியுள்ளதால் தமிழகத்தில் தேர்தல் அலை வீசத் துவங்கியுள்ளது.
இன்னும், அடுத்த அடுத்த கட்சி தலைவர்கள் தங்கள் பரப்புரையை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments





