Spotlightசினிமா

மாஸ்டர் ரிலீஸ் தேதி இதோ… கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார்.

படத்தினை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு தேதி தொடர்ந்து தள்ளிக் கொண்டே சென்றது.

தற்போது, தமிழகத்தில் ஊரடங்கு முடிவடையும் தருவாயில், கொரோனாவின் தாக்கமும் சற்று தணிந்த நிலையில் இதன் வெளியீட்டை திட்டமிட்டு வருகிறது படக்குழு.

ஜனவரி மாதம் 13 ஆம் தேதி படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சத்தால் இன்னமும் திரையரங்குகளை யாரும் அண்டாத சூழ்நிலையில், மாஸ்டர் நிச்சயம் மக்களை மீண்டும் திரைக்கு கொண்டு வரும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

கூடவே, சிம்பு நடித்திருக்கும் ஈஸ்வரன் படமும் அன்றைய தேதியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button