
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த படம் “காஞ்சனா 3″. இப்படத்தில் வில்லனாக வித்தியாசமான கெட் அப்’பில் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் சம்பத் ராம்..
இந்த நடிப்பிற்காக கேரளாவில் சிறந்த துணை நடிகருக்கான ” கலாபவன் மணி நினைவு விருது” வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகர் சம்பத் ராம் கூறும் போது’ ” 2019 ஆம் ஆண்டு திரு.ராகவா லாரன்ஸ் அவர்களின் இயக்கத்தில் வெளியான “காஞ்சனா 3” திரைப்படத்தில் நான் “அகோரி” கதாபாத்திரத்தில் நடித்ததற்காக “சிறந்த துணை நடிகர்-2019” க்கான “கலாபவன் மணி நினைவு விருது” அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரானா முடக்கம் காரணமாக சிறிது தாமதமாக கலாபவன் மணி அவர்களின் பிறந்த நாளான 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி எளிய முறையில் கேரளாவில் நடந்த போது நான் அங்கு சென்று நேரில் விருதை பெற முடியாத நிலையில் எனக்காக திரு. இஸ்மாயில் மற்றும் குழுவினர் நேரடியாக சென்னை வந்து சிறிய முறையில் என் கலையுலக குருநாதர் “வல்லரசு” புகழ் இயக்குனர் திரு. N.மகாராஜன் அவர்களின் தலைமையில் விழாவை நடத்தி அவரது திருக்கரங்களாலேயே எனக்கு விருது வழங்கி என்னை கௌரவித்தது என் வாழ்வில் மறக்க முடியா நிகழ்வாக மாறியுள்ளது. ” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, ” இவ்விருதை எனக்கு நேரில் வழங்க கேரளாவில் இருந்து எனக்காக சென்னை வந்த திரு. இஸ்மாயில் அவர்களுக்கும் , எனக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்த என் திரையுலக குருநாதர் “வல்லரசு” திரைப்பட புகழ் இயக்குனர் திரு. N.மகாராஜன் அவர்களுக்கும் , “காஞ்சனா 3″ திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர்/நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர்/இயக்குனர் திரு. பிரிதிவிராஜ்,நடிகர் /இயக்குனர் திரு. லால், மூத்த இயக்குனர் திரு. ஜோஷி,நடிகர் திரு. நரேன் மற்றும் பலர் வாங்கி இருக்கும் இந்த விருதை நானும் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.” என்று கூறினார்..
சிழாவில் “யமுனா” மற்றும் “கட்டில்” திரைப்பட இயக்குனர் திரு. E.V.கணேஷ் பாபு மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.






