Spotlightசினிமா

விஜய் ஆண்டனி இயக்கத்தில் “பிச்சைக்காரன் 2”; பூஜையுடன் துவங்கியது!

பிச்சைக்காரன் 2 மூலம் இயக்குநராக தனது அடுத்த பயணத்தை துவங்கியுள்ளார் விஜய் ஆண்டனி.

பூஜையுடன் “பிச்சைக்காரன் 2” படப்பிடிப்பு துவங்கியது.

தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் S.A. சந்திரசேகர் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு விஜய் ஆண்டனியை வாழ்த்தினார்.

தமிழ் திரையை சேர்ந்த 17 இயக்குனர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். எஸ்.ஏ.சந்திரசேகர், ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர்கள் சசி (பிச்சைக்காரன்), பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்), G.சீனிவாசன் (அண்ணாதுரை), கணேசா (திமிருபிடிச்சவன்), நவீன் (அக்னி சிறகுகள்), ஆனந்த கிருஷ்ணன் (கோடியில் ஒருவன்), பாலாஜி K குமார், தனஞ்செயன், ஃபெப்சி சிவா, கமல் போஹ்ரா, சித்தார்த், B பிரதீப் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் S.A. சந்திரசேகர் குத்துவிளக்கை ஏற்றி துவக்கி வைக்க, இயக்குனர் சசி கேமராவை ஆன் செய்தார், இயக்குனர் விஜய் மில்டன் முதல் ஷாட்டிற்கு கிளாப்போர்டைத் தட்டினார்.

பிச்சைக்காரன் 2 படத்தை Vijay Antony Film Corporation சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button