
தல அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் அதீத எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது ‘வலிமை’.
இப்படத்தினை பற்றி எந்த ஒரு அறிவிப்பு வெளிவராத நிலையில், திடீரென பல அறிவிப்புகளை அடுத்தடுத்து கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது படக்குழு.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து, மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என அடுத்தடுத்து வெளிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்தனர் படக்குழுவினர்.
தற்போது படக்குழு ரஷ்யாவில் உள்ளது. அங்கு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தல அஜித் அங்கு சில நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளாராம்.

அங்கு தற்போதுள்ள கால சூழல் அஜித்திற்கு மிகவும் பிடித்து போக, அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவிருக்கிறாராம்.
அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
Facebook Comments





