
து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் தான் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை விஷாலின் சொந்த நிறுவனமான VFF நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
விநியோகஸ்தரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க வீரமே வாகை சூடும் திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்திற்கு “U/A” தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
Facebook Comments




