Spotlightசினிமா

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வந்த “தி வாரியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஸ்தாத் ராம் பொதினேனி, இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில், இருமொழி ஆக்‌சன் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது ‘தி வாரியர்’.

இப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் புல்லட் பாடல் யூடியூப்பில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது மற்றும் சமீபத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்ட டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், ஆதி பினிசெட்டி வலுவான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உடன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

“தி வாரியர்” படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் Srinivasaa Silver Screen பேனரில் ஶ்ரீனிவாசா சிட்தூரி தயாரிக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்குகிறார்.

‘தி வாரியர்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 14, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button