
14 வது ஐபில் போட்டிக்கான ஏல சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. அனைத்து வீரர்களையும் அணியினர் போட்டி போட்டு விலைக்கு வாங்கினர்.
ஐபிஎல் போட்டி எப்போது என அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஒவ்வொருவராக சென்னையை முகாமிட தொடங்கியுள்ளனர்.
நேற்றைய தினம் அம்பத்தி ராயுடு சென்னைக்கு வந்திருந்த நிலையில், இன்று சென்னை அணியின் கேப்டன் தல தோனியும் விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பிக்க வீரர்கள் ஒவ்வொருவராக வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments