Spotlightவிமர்சனங்கள்

பிஸ்தா – விமர்சனம்

இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஸ்ரீ மிருதுளா முரளி, அருந்ததி, சதீஷ், யோகி பாபு இவர்களது நடிப்பில் உருவாகி இருக்கு படம் தான் “பிஸ்தா”.

ஏற்கனவே கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பிஸ்தா திரைப்படம் மிகப் பெரும் அளவில் வெற்றி பெற்றது. அதில் இருந்த லூட்டிகள் காமெடி கூத்துகள் அனைத்தும் இப்படத்திலும் உள்ளதா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்…

கதைப்படி

யோகி பாபு ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். பெற்றோர்களால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படும் மணமக்களில் யாரேனும் காதலித்து இருந்தால், மணப்பெண்ணையையோ மணமகனையோ அவர்களது ஜோடியுடன் சேர்த்து வைப்பது தான் இவரது தொழில்.

இந்த நிறுவனத்தில் பணிபுரிவர் தான் சிரீஷ் மற்றும் சதீஷ் தொடர்ந்து இதே பணிகளை செய்து வரும் ஸ்ரீஸ் ஒரு கட்டத்தில் நாயகி மிருதுளாவை சந்திக்கிறார்.

பார்த்தவுடன் அவர் மீது காதலில் விழுகிறார். மிருதளாகவும் சிரீஷை காதலிக்க ஆரம்பிக்கிறார். நாம் இருவரும் இணைய வேண்டும் என்றால் இந்த தொழிலை கைவிடுமாறு சத்தியம் வாங்கிக் கொள்கிறார் நாயகி மிருதுளா.

ஆனால் நாயகனோ சத்தியம் செய்துவிட்டு மீண்டும் அந்த தொழிலில் செய்து கொண்டிருக்கிறார் ஒரு கட்டத்தில் மிருதலாவுக்கு இந்த தகவல் தெரிய வர நாயகனை விட்டுப் பிரிகிறார்

மீண்டும் இந்த ஜோடி இணைந்ததா இல்லையா என்பதை படத்தின் மீதி கதை..

பல படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும் ஏனோ இந்த படத்தில் இன்னும் முயற்சி வேண்டும் பயிற்சி வேண்டும் சிரிஷ் அவர்களே என்று தான் கூற தோன்றுகிறது. காதல் காட்சிகளில் இன்னும் முயற்சி வேண்டும்..

நாயகி மிருதுளா முரளி பார்ப்பதற்கு அழகாகவும் தோன்றும் காட்சிகள் தேவதையாகும் வந்து செல்கிறார். காதல் காட்சிகளில் இவருக்கும் ஒரு சில பயிற்சி வேண்டும் என்றுதான் கூற வேண்டும்.

நாயகியின் தோழியாக நடித்திருந்த அருந்ததி தனது கேரக்டரை தெளிவாக செய்து முடித்து இருக்கிறார்… சதீஷ் மற்றும் யோகி பாபு இருவரும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள் .இருந்தாலும் சதீஷின் டைமிங் கவுண்டர்கள் ஒரு சில இடங்களில் கடுப்பை தான் கிளப்பி உள்ளது..

இயக்குனர் தான் சொல்ல வேண்டியதை இன்னும் சற்று தெளிவாக கூறியிருக்கலாம் முதல் பாதியில் ஏனோ செல்ல வேண்டும் என்று தோன்றியது போல் சற்று போரடிக்கும் படியான திரைக்கதை நகர்த்தி விட்டார்.. இரண்டாம் பாதியில் கிளைமேக்ஸ் காட்சியில் கொடுத்த விறுவிறுப்பையும் முக்கியத்துவத்தையும் படம் முழுக்க கொடுத்திருந்தால் பிஸ்தா பலே ஆக இருந்திருக்கும்… மொத்தத்தில் பிஸ்தா பலிக்காமல் போனது தான் மிச்சம்

இசை மற்றும் ஒளிப்பதிவு இன்னும் சற்று கூடுதல் கவனம் கொடுத்து இருக்கலாம்.. எப்போதுமே தான் தேர்ந்தெடுக்கும் கதையில் கவனம் செலுத்தி வரும் சிரிஷ் இப்படத்தில் ஏனோ சறுக்கியிருப்பது ஆச்சரியமாக தான் உள்ளது . இனி வரும் படங்களில் நேர்த்தியான கதைகளை தேர்வு செய்துகொள்ளுங்கள் சிரிஷ் சார் அவர்களே…

 

Facebook Comments

Related Articles

Back to top button