Spotlightசினிமாவிமர்சனங்கள்

டிரைவர் ஜமுனா – விமர்சனம் 3.25/5

யக்குனர் கிங்க்ஸ்லி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “டிரைவர் ஜமுனா”. பெண் ஓட்டுனராக ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடித்திருப்பதால் படம் சற்று கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

கதைப்படி,

ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்படுகிறார். அவரது அம்மா உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருக்கிறார். இதனால் குடும்பத்தை தனி ஆளாக தூக்கி நிறுத்தும் பொறுப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வருகிறது.

ஓலா ஓட்டுனர் பணிக்கு செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பிரபல அரசியல்வாதி ஒருவரை கொல்ல செல்கிறது மூவர் அடங்கிய கூலிப்படை. செல்லும் வழியில் வாகனம் விபத்துக்குள்ளாகிறது.

இதனால் ஓலா வாகனத்தில் செல்ல முடிவெடுக்கின்றனர் மூவரும். அது ஐஸ்வர்யா ராஜேஷின் வாகனமாக இருக்கிறது. கூலிப்படையினர் மூவரும் ஐஸ்வர்யா ராஜேஷின் வாகனத்தில் ஏறிக் கொள்கின்றனர்.

போலீஸார் கூலிப்படையை தேட, மூவரும் ஐஸ்வர்யா ராஜேஷின் வாகனத்தில் இருக்க… இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை..

தனி ஆளாக படம் முழுவதையும் தனது தோளில் சுமந்து நிற்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தின் அநேக காட்சிகள் காருக்குள் மட்டும் நிகழ்வதால், தனது கண் அசைவு மட்டுமே வைத்து படம் முழுவதையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

கூலிப்படையாக நடித்த மூவருமே, தனது சிறப்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

வித்தியாசமான கதை, திரைக்கதை நகர்வு என இரண்டிலும் தனது முத்திரையை தெளிவாக பதித்திருக்கிறார் இயக்குனர் கிங்க்ஸ்லி.

எடுத்த எடுப்பிலேயே முதல் பாதி முடிந்து விடுவதால், கதை மீதான சுவாரஸ்யம் சற்று குறைந்து விடுகிறது. இரண்டாம் பாதியிலும் அநேக லாஜீக் ஓட்டைகள் எட்டிப் பார்க்கின்றன.

இருந்தாலும், அந்த படபடப்பு காட்சிகள், என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு என இரண்டையும் படம் பார்க்கும் ரசிகர்களிடம் கொண்டு வந்து நின்று வென்றிருக்கிறார் இயக்குனர்.

அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் யாரும் எதிர்பாராத ஒன்று.

கோகுலின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும் பலம். கார் கவிழும் காட்சியை மிகவும் மிரட்டலாக எடுத்திருக்கிறார்கள்.

கார் செல்லும் காட்சிகள் ஒவ்வொன்றையும் அசர வைக்கும்படியாக கொடுத்திருக்கிறார் கோகுல்.

ஜிப்ரானின் பின்னணி இசை கதையோடு பயணிக்க வைக்க மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

லாஜிக் ஓட்டைகள் ஒரு சில எட்டிப்பார்த்தாலும்

டிரைவர் ஜமுனா – துணிந்து வென்றவள்… 

Facebook Comments

Related Articles

Back to top button