
இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், அபிஹாசன் நடிப்பில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த படம் தான் மிஷன் சாப்டர்1.
அதே நாளில் அதிக பொருட் செலவில் உருவாக்கப்பட்ட கேப்டன் மில்லர் மற்றும் அயலான் இரு படங்களும் வெளியானதால், இவ்விரு படங்களுக்கே அதிகமான திரையரங்குகள் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் மிஷன் படத்திற்கு தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவால் நாளுக்கு நாள் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல், படம் வெளியான பத்து நாட்களில் ஒன்பது நாட்களில் இல்லாத அளவிற்கு பத்தாவது நாள் வசூல் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பொங்கல் ரேசில் வேகமெடுத்து இரண்டாம் வாரத்தில் வெளியான மூன்று படங்களில் முதல் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது மிஷன் சாப்டர்1.
நல்ல கதை அதுவே தனது சாதனையை நிகழ்த்தும் என்பதற்கு இப்படம் ஒரு சான்றாக நிற்கிறது.



