Spotlightசினிமா

LOVE பண்ணும் போது BED Share பண்ணலாமா…? LLR கூற வருவதென்ன.??

காதலின் இலக்கு காமம் ஆனாலும், காமத்தின் இலக்கு காதலானாலும் அதன் வாழ்வு தற்காலிகமானதுதான். காமம் கடந்த காதலே நீடித்து வாழும் என்பதை படத்தில் காட்டமாலே பார்வையாளனுக்கு கடத்தியிருக்கிறார் (LLR) LOVE LUST RETRO Short Film-யின் இயக்குனர் மாஸா கோபி.

இதில் நடித்தவர்கள் தங்களின் கதாபாத்திரங்களை அழகாக புரிந்து கொண்டு நடித்திருந்தாலும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாயகியாக நடித்த ஹாசின் எல்லாவிதமான உணர்வுகளையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி இக்கதையை தாங்கிச் செல்கிறார்.

படத்தின் தொடக்கத்தில் நாயகி மேவி தனக்கான SPACE-ஐ தனது காதலன் கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக வலியோடு அவனை விட்டு பிரிகிறாள். அந்த வேதனையோடு அவளின் காலங்கள் கடக்க கடக்க அவள் கண்ணீரும் கரைந்து காதலனின் நினைவும் மறைகிறது. இயல்பான வாழ்வுக்கு மெல்ல அவள் திரும்பி வெளியே வருகிறாள். அப்போது நாயகன் கார்த்திக் கண்ணில் படுகிறாள். அந்த நொடியிலிருந்தே அவளுக்கு தொடர்ந்து அவன் காதல் வலையும் வீசுகிறான். நான் BREAKUP ஆனவள் என்று நேர்மையாக அவனிடம் சொல்லி மேவி முற்றுப்புள்ளி வைக்க அவனோ மிகவும் சாதாரணமாக நானும் BREAKUP ஆனவன் தான் என அதை எளிமையாக கடந்து இரண்டாவது காதலுக்கான துளிர் விடுகிறான்.

ஏன் என்று கூட கேட்காத அவன் POSITIVE APPROACH-ல் மேவி மீண்டும் காதலில் விழுகிறாள். இந்த காதல் அவளுக்கு கற்றுக்கொடுத்த பாடமென்ன என்பதே இக்கதையின் பயணமும் முடிவும். அதை இக்காலத்தில் உள்ள இளைஞர்களின் இயல்பான மனநிலையை பிரதி எடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் லெனின் ராஜகுரு, இசை அமைப்பாளர் சைமன் டெல்பர், படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் என இவர்களுடன் கைகோர்த்து ஒரு படத்தைப் போல இந்த SHORT FILM-ஐ PRESENTATION பண்ணியிருக்கிறார் இயக்குனர் மாஸா கோபி.

விரைவில் இந்த பெயர் வெள்ளித்திரையில் இடம் பிடிப்பதற்கு தகுதியானதே…

Facebook Comments

Related Articles

Back to top button