Spotlightசினிமாவிமர்சனங்கள்

துணிவு – விமர்சனம் 3.5/5

ச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் துணிவு. படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த துணிவான எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைப்படி,

தமிழ்நாட்டின் மிகப்பெரும் வங்கியை கொள்ளையடிக்க ஒரு கும்பல் அந்த வங்கிக்குள் செல்கிறது.. உள்ளே சென்ற பிறகு தான் தெரிகிறது, அவர்களுக்கு முன்னாடியே அங்கு ஒரு கும்பல் இருக்கிறது என்று. அந்த கும்பலின் தலைவனாக வருகிறார் அஜித்குமார்.

வங்கிக்குள் இருக்கும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை சிறை பிடிக்கிறார் அஜித்குமார். காவல்துறையிடம் தொடர்ந்து அடுத்தடுத்த தனக்கான டிமாண்டினை வைக்கிறார் அஜித்.

யாருக்காக அந்த வங்கிக்குள் சென்றார்.? அங்கு என்ன நடந்தது .? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒட்டுமொத்த படத்தையும், கதையையும் தூக்கி நிறுத்தி வைக்கின்ற தூணாக வந்து நிற்கிறார் அஜித்குமார்.. மிகவும் ஸ்டைலிஷாக தனக்கே உரித்தான வசனத்தில் பேசி அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தின் முதல் பாதி முழுவதும் ரசிகர்கள் கொண்டாடும் படியான படமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர். அஜித்குமார் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் மிகப்பெரும் அளவில் கொண்டாடும் படியாக தான் காட்சிகளை வடிவமைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் வினோத்.

அசுரன் திரைப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருந்த மஞ்சு வாரியர், மிகவும் ஸ்டைலிஷான கேரக்டரில் தோன்றி அனைவரும் வியக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் மஞ்சு வாரியர்.

தனக்கு கொடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரி கேரக்டரை மிகவும் யதார்த்தமாக கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

மைபா என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மோகன சுந்தரம் அவர்களின் நடிப்பை அனைவரும் கொண்டாடுவார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கு திரையரங்கில் சிரிப்பலை அதிகமாகவே எட்டிப் பார்க்கிறது. அவரோடு பால சரவணனும் மிகவும் யதார்த்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொகேன், அந்த கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

மற்றபடி, ஜிப்ரான் தனக்கே உரித்தான மிரட்டல் இசையில் கவர வைத்திருக்கிறார். பாடல்களும் இசையும் படத்திற்கு பலமாகவே வந்து நிற்கிறது. நிரவ் ஷா-வின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.

எடிட்டிங்க் – ஷார்ப்…

மாஸாக கதையை முடித்ததோடு மட்டுமல்லாது, இக்காலக்கட்டத்தில் மக்களுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு படமாக கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் வினோத்..

க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை மட்டும் இன்னும் சற்று சிறப்பாக கொடுத்திருந்தால் வேற ரகமாக இருந்திருக்கும்..

மொத்தத்தில்..

துணிவு – துணிச்சலான சம்பவம் தான்…

Facebook Comments

Related Articles

Back to top button