
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் விஜய் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்து விட்ட நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது.
குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
படத்தின் தலைப்பு ”ஜனநாயகன்” என்று வைக்கப்பட்டுள்ளது. மக்கள் முன் செல்பி எடுப்பது போன்றும், நான் ஆணையிட்டால் பாடலில் எம் ஜி ஆர் சாட்டையை சுழற்றுவது போன்று விஜய்யும் சாட்டை சுழற்றுவது போன்ற இரு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
படத்தின் அடுத்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் சினிமா கேரியரில் இதுவே அவரது இறுதிப்படமாக இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments


