Spotlightவிமர்சனங்கள்

ஒத்த ஓட்டு முத்தையா – விமர்சனம்

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகிபாபு , ரவிமரியா, O A K சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து , சித்ரா லஷ்மண்,வையாபுரி , முத்துக்காளை, T R சீனிவாசன்,வாசன் கார்த்திக் , அன்பு மயில்சாமி ,கஜேஸ் நாகேஷ் , கூல் சுரேஷ்,சென்ட்ராயன்,சதீஸ் மோகன்,இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார்,ராஜேஸ்வரி, தாரணி , லேகா Sri ,Dr.Gayathri ,மணிமேகலை ,மணவை பொன் மாணிக்கம் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”ஒத்த ஓட்டு முத்தையா”.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் S A காத்தவராயன். படத்தொகுப்பு செய்திருக்கிறார் ராஜா சேதுபதி & நோயல்.

சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் நின்று ஒரே ஒரு ஓட்டை பெற்றதால் கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கப்படுகிறார். தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று திட்டவட்டமாக இருக்கிறார் கவுண்டமணி.

ஆனால் அவரது தங்கைகளோ தான் காதலிப்பவர்களை திருமணம் செய்ய முயற்சித்து வருகிறார்கள். அதற்காக மூவரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று கவுண்டமணியிடம் கூறி அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று மூன்று தங்கைகளும் திட்டமிடுகின்றனர்.

இந்த சமயத்தில் மீண்டும் தேர்தல் வருகிறது. இம்முறை கவுண்டமணிக்கு கட்சி சீட்டு தராமல் கவுண்டமணியின் டிரைவராக இருக்கும் யோகி பாபுவிற்கு சீட்டு கொடுக்கிறது.

இதனால் கோபம் அடைந்த கவுண்டமணி கட்சியை விட்டு விலகி சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

இறுதியில் தேர்தலில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா? அவரது தங்கைகள் அண்ணனை ஏமாற்றி காதலர்களை கரம் பிடித்தார்கள் இல்லையா?? என்பதை படத்தின் மீதி கதை

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கவுண்டமணி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார். வழக்கம்போல் நக்கல், நையாண்டி, காமெடி என பல கோணங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் கவுண்டமணி. ஆங்காங்கே சின்ன சின்ன கவுண்டர் மட்டுமே ரசிக்கும்படியாக இருந்தது மற்றபடி இன்னும் சற்று திரைக்கதையில் வேலை செய்திருக்கலாமே என்றே கூறத் தோன்றியது.

மேலும் கவுண்டமணியின் வயது இப்படத்தில் சற்று அதிகமாகவே தென்பட்டது. படத்தில் தங்கைகளாக நடித்திருந்த மூவரும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

யோகிபாபுவின் காமெடி எதிர்பார்த்து அளவிற்கு படத்தில் எடுபடாமல் போனது சற்று ஏமாற்றம் தான். அன்பு மயில்சாமி, கதிரேசன், ரவி மரியா, சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட பல நடிகர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சித்தார்த்திப்பின் இசையில் பாடல்களும் பின்னணியையும் ஓகே ரகமாக கடந்து செல்ல வேண்டி இருந்தது. காத்தவராயன் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் அழகாக கொடுத்திருக்கிறது.

கவுண்டமணியை வைத்துக்கொண்டு இயக்குனர் அரசியல் நையாண்டியோடு ஒரு படத்தை கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறார். தான் நினைத்ததை திரைக்குக் கொண்டுவருவதில் பெரிதாகவே தடுமாறியிருக்கிறார் இயக்குனர் சாய்ராஜகோபால்.

ஒரு சில இடங்களில் மட்டுமே நம்மை ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் ஏமாற்றமே மிஞ்சியது. நிகழ்கால அரசியலுக்கு ஏற்றார் போல் திரைக்கதையை கொண்டு வந்திருந்தால் இன்னும் நன்றாகவே படத்தை ரசிக்க வைத்திருக்க முடியும்

மொத்தத்தில்,

ஒத்த ஓட்டு முத்தையா – சத்திய சோதனை

Facebook Comments

Related Articles

Back to top button