Spotlightசினிமா

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயனின் “மதராஸி”!

யக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி, வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் மதராஸி.

இப்படம், வரும் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. படத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் முழுவீச்சில் ப்ரொமோஷனில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர், அதிரடி ஆக்‌ஷன் கலந்த காட்சிகளோடு வெளியானது. பரவலாக அனைத்து தரப்பினராலும் பாராட்டுகளைப் பெற்றது இந்த ட்ரெய்லர். இதனால், படத்தினை பார்க்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

படத்தின் ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், படத்தின் டிக்கெட்டுகள் அதிவேகமாக விற்றுத் தீர்ந்த வண்ணம் இருக்கின்றன.

மதராஸி திரைப்படத்திற்கு யூ/ஏ தரச் சான்றிதழ் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத்.

Facebook Comments

Related Articles

Back to top button