Spotlightசினிமா

ரிலீஸுக்கு தேதி குறித்த ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’ படக்குழு!

ளம் நாயகன் விக்ராந்தை தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மதிப்புமிக்க படம் தான் ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’. மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். டேஃப் ப்ராக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் விக்ராந்த் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறார் .

டேஃப் ஃபிராக் புரொடக்ஷன்ஸ் பேனரில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ஹிருதயம்’ மற்றும் குஷி புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் சமீபத்தில் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு. சமீபத்தில் வெளியான டீசரைப் பார்த்தால், பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன், காதல் போன்ற பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியிருப்பது தெரிகிறது. மேலும், ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமார் காட்சிப்படுத்திய பிரமாண்ட காட்சிகளும், ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

இப்படம் நவம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என இன்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதில் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனம் செலுத்திவருகின்றனர்.

இப்படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, ருக்சார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் நாசர், சுஹாசினி மணிரத்னம், வெண்ணேலா கிஷோர், சத்யா, பிரம்மாஜி, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சம்மக் சந்திரா, அன்னபூர்ணம்மா, ராஜா ரவீந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button