
இப்படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம், Power House Pictures நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார்.
இதுவரை படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
*தொழில்நுட்ப குழு*
எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்





