
நடிகர் Arjun Das சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த மர்மமான பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில், “ஒருவரை மிகவும் காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால்… அதிலிருந்து ஒருவர் எப்படி முன்னேற முடியும்?” என்ற உணர்ச்சிப் பூர்வமான வரிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதைப் பார்த்த பலரும், அர்ஜுன் தாஸ் உண்மையில் மனவேதனையில் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சில ரசிகர்கள், இந்த பதிவு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறிக்கலாம் என்று நினைக்கின்றனர். அதே நேரத்தில், மற்றவர்கள் இது அவரது புதிய படம் அல்லது திட்டத்திற்கான புரமோஷன் ஆக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.
மேலும், கடந்த காலத்திலும் Arjun Das அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியிருந்தன. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு, அவர் ஒரு பெண்ணுடன் வெளியே சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் அந்த பெண் யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
தற்போது அவர் பகிர்ந்த இந்த பதிவின் உண்மையான அர்த்தம் என்ன என்பது குறித்து நடிகர் எந்த விளக்கமும் அளிக்காததால், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.





