விமர்சனங்கள்

கார்மேனி செல்வம் – விமர்சனம் 3.25/5

CAST : P.SAMUTHIRAKANI, LAKSHMI PRIYA CHANDRMOULI, KARAN CHAKARAVARTHI, GAUTHAM VASUDEV MENON ,
ABHINAYA, BADAVA GOPI , KARTHIK KUMAR , KOTHANDAM , MADHUMITHA , ARJUNAN , HARITHA PARAKOD , JAYANTHI ,
BABY K LAYA

Producer Arun Rangrajulu
Director Ram Chakri
Creative Producer Shree Saravanan
Dop Yuvaraj Dakshan
Music as a Service Musicloud Studio & Technology
Edit Jagan R V – Dinesh S

கதைப்படி,

கார் டிரைவராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, மனைவி மற்றும் மகனுடன் அமைதியான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், “சொந்த வீடு” என்ற கனவு அவரை கடன் வலையில் இழுத்துச் செல்கிறது. தேவைக்காக தொடங்கிய கடன், பின்னர் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் சுமையாக மாறுகிறது. அந்த ஒரு முடிவு குடும்ப உறவுகளையும், மனித உறவுகளையும் எப்படி சோதிக்கிறது என்பதே படத்தின் மையம்.

சமுத்திரக்கனி, வழக்கம்போல இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்தை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் நமக்கு வேற யாரு இருக்கிறார் என்று தோன்றும் அளவிற்கான நம்பிக்கை நாயகனாக கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி.

அவருக்கு இணையாக, லட்சுமி பிரியா சந்திரமௌலி ஒரு மிடில் கிளாஸ் மனைவியின் மனநிலையை மிகவும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறார்.

இரண்டாம் நிலை கதாபாத்திரங்களாக வரும் கௌதம் மேனன், அபிநயா மற்றும் மற்ற நடிகர்கள் கதையின் ஓட்டத்தை சீராக முன்னேற்ற உதவுகிறார்கள். யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவு, மிகவும் அழகான காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கிறது.. ஒரு உயிரோட்டத்தை நமக்குள் இப்படம் கடத்தியிருக்கிறது.

ராமானுஜத்தின் இசை படத்தின் கருவை நமக்குள் கடத்துவதில் பெரிய பங்காற்றியிருக்கிறது. கதைக்குள் நம்மையும் பயணம் செய்ய ஏதுவாக இசையை கொடுத்திருக்கிறார் ராமானுஜம்.

கடன் என்பது எதற்கானது என்ற ஒற்றை கருவை தாங்கி இந்த படம் வந்திருக்கிறது. கடன் என்பது ஆடம்பத்திற்கானது அல்ல, அது தேவைக்கானது மட்டுமே என்று உரக்க கூறியிருக்கிறார் இயக்குனர். இந்த பதிவிற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம். திரைக்கதையில் இன்னும் சற்று சுவாரஸ்யம் ஏற்றி, காட்சிகளை சற்று சுருக்கியிருந்தால், பரபரவென திரைக்கதை வேகமெடுத்திருந்திருக்கும்.

இயல்பான குடும்ப வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை கையில் எடுத்து அதனை உணர்ச்சிப் பொங்க கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை கூறிக் கொள்ளலாம். குடும்பமாக சென்று பார்க்கும் ஒரு உன்னத படைப்பாக இப்படம் வந்திருக்கிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை..

கார்மேனி செல்வம் – காவியம்…

Facebook Comments

Related Articles

Back to top button