விமர்சனங்கள்

நீளிரா – விமர்சனம் 3.75/5

CAST : NAVEEN CHANDRA, SANANTH, KAPILA VENU, ROOPA KODUVAYUR, VIDHU, SIDHU KUMARESAN, NAVAYUGA, SWATHI KIRSHNAN, NAMASIVAYAM THAMBIPILLAI, KAYAL VINCENT, Rohit Kokate,

Written And Directed By : SOMEETHARAN
DOP : SELVARATNAM PRATHEEPAN
Editor : RADHA SRIDHAR
Music : K
CO – PRODUCED BY RANA DAGGUBATI – KALYAN SUBRAMANIAN
PRODUCED BY Stone Bench Studio KAARTHIKEYAN S – KARTHIK SUBBARAJ.

ஒரு கதை அதன் தலைப்பிலேயே முழுக் கதையையும் உள்ளடக்கிடும்… அப்படியான ஒரு படம் தான் இந்த நீளிரா. நீளிரா என்பது நீண்ட இரவு என்பதே பொருள்…

போர் சூழ்ந்திருக்கும் ஈழப் பகுதியில், விடிந்தால் திருமணம் என்ற ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறது அந்த குடும்பம். இந்த சூழலில், மகளின் திருமணத்தை நடத்தவே இராணுவங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலை… மகிழ்ச்சிக்கான நாள், பயத்தால் நிரம்பிய தருணம்…

இந்திய அமைதிப்படை வீரர்கள் வீட்டுக்குள் தஞ்சம் புகும் அந்தச் சூழல், கதையில் மிகப்பெரும் சூழலை உருவாக்கி அடுத்து என்ன நடக்கும் என்கிற ஐயத்தை ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் பாய்ச்சி நம்மை கதிகலங்க வைக்கும் படைப்பு தான் இந்த நீளிரா

படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களுமே படத்தின் கதாநாயகர்களாக தென்பட்டார்கள். இதில் இவர் தான் ஹீரோ என்றில்லாமல், நடித்த அனைவரின் கதாபாத்திரத்தையும் ஹீரோவாக்கி வைத்திருக்கிறார் இயக்குனர்.

நவீன் சந்திரா ஒரு ராணுவ வீரராக கதை முழுக்க முழுக்க அவர் முகம் மட்டுமே பிரதிபலித்தது.. கபிலா வேணு, சிது குமரேசன், ரூபா கொடுவாயூர் உள்ளிட்டோர் இயல்பான நடிப்பால் கதையை இழுத்துச் செல்கிறார்கள். கயல் வின்சென்ட், சனந்த் ஆகியோரின் பங்களிப்பும் காட்சிகளுக்கு உயிர் ஊட்டுகிறது.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை தான் இந்த படத்தின் முதுகெலும்பு. இரவு நேரக் காட்சிகளை செல்வரத்தினம் பிரதீபன் துல்லியமாக படம் பிடித்த விதம், நம்மை கதையோடு மையக்கருவிற்கே இழுத்துச் சென்று விட்டது. நாமும் அந்த களத்தில் சிக்கிக் கொண்டோம் என்ற உணர்வைக் கொடுத்துவிட்டார் ஒளிப்பதிவாளர். கே-வின் பின்னணி இசை அந்த அமைதிக்குள் ஒளிந்திருக்கும் அச்சத்தை மெதுவாக வெளிக்கொணர்கிறது.

இயக்குநர் சோமிதரன் அந்த மண்ணில் வாழ்ந்த அனுபவம் இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இது கற்பனைக்கதை போல இல்லாமல், “இது நடந்திருக்கலாம்” என்ற உணர்வை தருகிறது. சாலையில் நடப்பதற்கே பயப்படும் சூழலில், ஒரு குடும்பம் திருமணத்தை நடத்த முயற்சிப்பது — அதில் இருக்கும் வலி, அச்சம், அன்பு, பதட்டம், கோபம், பொறுமை என அனைத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

இதுவரை தமிழ் சினிமா மட்டுமல்ல, உலக சினிமாவில் யாரும் தொடாத ஒரு உணர்வை இந்த படத்தில் தொட்டு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறார் இயக்குனர். இப்படியொரு படைப்பை யாரும் யூகித்திருக்கமாட்டார்களே என்று எண்ணும் நேரத்தில், அங்கிருந்த தனக்கு மட்டுமே அதன் வலி தெரியும் என்று உணர்ந்து, அறிந்து இந்த படைப்பைப் படைத்திருக்கிறார் இயக்குனர் சோமிதரண்.

இந்த படைப்பை நம் கண்முன்னே கொடுத்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்..

நீளிரா – தமிழராக நிச்சயம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு படைப்பு..

Facebook Comments

Related Articles

Back to top button