Spotlightசினிமா

சிவகார்த்திகேயன்–கமல் கூட்டணி? ‘சேயோன்’ படம் பற்றி சூடான தகவல்! 🔥

சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘சேயோன்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ‘தாய் கிழவி’ புகழ் சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார்.

மேலும், இந்த படத்தை கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கிறது என கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக சிவகார்த்திகேயன் சுமார் ₹65 கோடி சம்பளம் பெறுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், OTT உரிமைக்காக Netflix நிறுவனத்துடன் சுமார் ₹55 கோடி மதிப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், படம் பார்த்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button