
ஒவ்வொரு மனிதனும் தன்னை ஊக்கப்படுத்தவோ அல்லது தன்னை பலப்படுத்தவோ ஒரு தலைவனை முன் மாதிரியாக வைத்து உழைத்து வாழ்வில் முன்னேறுவான்.
இப்படியாக, உலகம் முழுவதும் வெற்றி பெற்ற அல்லது வெற்றியை தேடிச் செல்லும் ஒவ்வொருவரும் தனக்கான முன் மாதிரி ஒருவரை எடுத்து அவர்களின் வழியையோ அல்லது அவர்களின் வார்த்தையையோ வைத்து உழைப்பார்கள்.
தான் வைக்கும் முன் மாதிரி தலைவர்கள் கோடியில் ஒருவராக தான் இருப்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு எண்ணம் இருக்கும், தானும் அந்த “கோடியில் ஒருவனாக” உருவெடுக்க வேண்டும் என்று, அதை நோக்கி தான் அவரது பயணமும் இருக்கும்.
நேரம், காலம், உழைப்பு, அதிர்ஷ்டம் என அனைத்தும் ஒன்று கூடி நிற்கும் போது தலைவனாக தலைமையெடுத்து கோடியில் ஒருவனாக அவன் அவதரிக்கிறான்.
கோடியில் ஒருவனாக வருவதற்கு அவன் பட்ட இன்னல்கள், போராட்டங்கள், இழப்புகள் என பல இருக்கும். தான் பட்ட இன்னல்களை மற்றவர்கள் படக்கூடாது என நினைத்து நல்வழியை நோக்கி மக்களை செலுத்துபவனே ஒரு உன்னதமான தலைவனாக “கோடியில் ஒருவன்”ஆக அவதரிக்கிறான்.
விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “கோடியில் ஒருவன்”. “கோடியில் ஒருவனாக இவர் என்ன கூற வருகிறார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.
அதுவரை காத்திருப்போம்….





