
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் இணைந்து விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவற்றின் மூலம் இத்திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Facebook Comments




