SpotlightUncategorizedவிமர்சனங்கள்

சங்கத்தலைவன் – விமர்சனம் 3/5

ருணாஸ், நூற்பாலை நெய்யும் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் மாரிமுத்து. இவரது நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு ஒரு பெண்ணின் கை துண்டாகிறது.

நஷ்ட ஈடு வழங்காமல் அந்த பெண்ணை ஏமாற்ற நினைக்கிறார் மாரிமுத்து.

மறைமுகமாக, இந்த பிரச்சனையை சமுத்திரக்கனியிடம் எடுத்துச் செல்கிறார் கருணாஸ்.

போராடி உரிமைகளை பெற்றுத் தரும் கம்யூனிசத்தைச் சேர்ந்த சமுத்திரக்கனி, அங்குள்ள நெசவுத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

சமுத்திரக்கனி, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈட்டை முறையாக பெற்றுக் கொடுக்கிறார்.

ஒருகட்டத்தில், பிரச்சனையை சமுத்திரக்கனியிடம் எடுத்துச் சென்றது கருணாஸ் தான் என மாரிமுத்துவிற்கு தெரிய வருகிறது.

அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதையாக அமைகிறது.

அதிக காமெடி கதாபாத்திரங்களில் பார்க்கப்பட்ட கருணாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசர வைத்திருக்கிறார்.

காமெடி, காதல், வேகம், துணிச்சல், ஏக்கம் என பல கோணங்களில் நடித்து மிரள வைத்திருக்கிறார் கருணாஸ்.

சமுத்திரக்கனி, வழக்கம்போல் கம்யூனிசத்தின் பெருமைகளையும், ஏன் போராட வேண்டும் யாருக்காக போராட வேண்டும் என்ற விளக்கத்தையும் மக்களுக்கு புரிய வைக்கும் எளிய மொழியில் கையாண்டு, கதாபாத்திரத்தோடு ஒன்றிருக்கிறார்.

கதையின் நாயகிகளான சுனு லெட்சுமி மற்றும் ரம்யா இருவருக்குமே மிக முக்கியமான படமாக சங்கத்தலைவன் அமைந்திருக்கிறது. மாடர்னாக வந்து செல்லும் ரம்யா இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று தாங்கி சென்றிருக்கிறார்.

வில்லனாக தோன்றிய மாரிமுத்து பேசும் முதலாளித்துவ பேச்சு கோபம் அடையச் செய்யும், அந்த அளவிற்கு கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார். தனது திமிரு பேச்சில் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை கொண்டு வந்திருக்கிறார்.

இசையமைப்பாளர்ராபர்ட் சற்குணம் இசையில் பாடல்கள் படத்தோடு ஒன்றிருக்கிறது. பின்னனி இசை கதையோடு பயணம் புரிகிறது.

ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு சிகப்பு வெளிச்சத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

கதாபாத்திரங்கள் அனைவரிடமும் மிக கச்சிதமாக நடிப்பைப் பெற்ற இயக்குனர் மணிமாறனுக்கு ஆகப் பெரும் வாழ்த்துகள்.

நாவலை திரையோட்டமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். போராட்டம், முதலாளித்துவம், தொழிலாளித்துவம், கம்யூனிசம் என பல படங்களில் கண்ட கதை என்பதால் சற்று அலுப்பை தட்டினாலும் , சங்கத்தலைவன் போற்றப்பட வேண்டியவன்

சங்கத்தலைவன் – தலைவனை தேடாதே, தலைவனாக உருவாகு….

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close