
நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பக்தி, புராணம், ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் கலந்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில், நயன்தாராவின் அம்மன் தோற்றமும் அவரது அழுத்தமான நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ரெஜினா கசாண்ட்ராவின் நடிப்பிற்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் ஒரு மணி நேரத்தில் 8,670 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்த எண்ணிக்கை 9,500-ஐ கடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 66,200-க்கும் அதிகமானோர் படத்தைப் பார்க்க ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுந்தர் சியின் பிரம்மாண்டமான காட்சியமைப்பும், பக்தியுடன் கலந்த கமர்ஷியல் திரைக்கதையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





